இன்று முதல் முதல்வர் மருந்தகங்கள்.. 1000 இடங்களில் திறந்து வைக்கும் விழா..!

Siva

திங்கள், 24 பிப்ரவரி 2025 (07:46 IST)
இன்று முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட உள்ள நிலையில், 1000 இடங்களில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த மருந்தகங்களை திறந்து வைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று முதல் தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட உள்ள நிலையில், சென்னையில் நடைபெறும் விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மருந்தகங்களை திறந்து வைக்கிறார். இந்த மருந்தகங்களில் அனைத்து விதமான மருந்துகள் மற்றும் மாத்திரைகள் குறைந்த விலையில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த ஆண்டு சுதந்திர தின விழாவின் போது, "முதல்வர் மருந்தகங்கள் தொடங்கப்பட்டு, மக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும்" என்று அறிவித்திருந்தார்.

இந்த மருந்தகங்களை திறப்பதற்கான பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், இன்று முதல் கட்டமாக 1000 மருந்தகங்கள் திறக்கப்பட உள்ளன. கூட்டுறவு சங்கங்கள் மூலம் 500 மருந்தகங்கள், தொழில் முனைவோர் மூலம் 500 மருந்தகங்கள் திறக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

38 மாவட்டங்களில் இந்த மருந்தகங்கள் திறக்கப்பட இருப்பதாகவும், சென்னையில் மட்டும் 33 மருந்தகங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எந்த மருந்தகங்களிலும் இல்லாத வகையில், மிகவும் மலிவான விலையில் தரமான மருந்துகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்