பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 2016 ஆம் ஆண்டு கறுப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக, பண மதிப்பு இழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட பின்னர் புதிய 500 ரூபாய் 2000 ரூபாய் நோட்டு அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், சென்னை மதுரவாயிலில் உள்ள பிரபல தியேட்டரில் இன்று பிச்சைக்காரன்-2 படத்தின் டிக்கெட் பெற போரூரைச் சேர்ந்த கோதண்டராமன் என்ற இளைஞர் தன் நண்பருடன் சென்றிருந்தார். அப்போது, 2 ஆயிரம் ரூபாய் நோட்டை வழங்கியுள்ளார். இதை கவுன்டரில் இருந்த ஊழியர் வாங்க மறுத்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து, ஊழியருக்கும் இளைஞருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.