சென்னை வாசிகளே… போக்குவரத்தில் மாற்றம்!!

Webdunia
புதன், 7 செப்டம்பர் 2022 (16:32 IST)
சென்னை பெசண்ட் நகர் வேளாங்கண்ணி ஆலய தேரோட்டத்தை முன்னிட்டு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


வேளாங்கண்ணியில் உள்ள மாதா ஆலயத்திற்கு தமிழ்நாட்டில் இருந்து மட்டுமல்லாமல் பல மாநிலங்களில் இருந்தும் மக்கள் வழிபாட்டிற்காக வருகை தருவது வழக்கமாக உள்ளது. இதற்காக ரயில் சேவைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று சென்னை பெசண்ட் நகர் வேளாங்கண்ணி ஆலய தேரோட்டத்தை முன்னிட்டு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் விவரம் பின்வருமாறு…
  1. இன்று மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை பெசண்ட் நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
  2. திரு.வி.க பாலம் வழியாக பெசண்ட் நகர் பேருந்து நிலையத்திற்கு செல்ல எல்.பி சாலை வழியாக செல்லும்.
  3. 7வது அவென்யூ மற்றும் எம்ஜி ரோடு சந்திப்பில் இருந்து அன்னை வேளாங்கண்ணி தேவாலயம் செல்ல அனுமதியில்லை
  4. எம் எல் பூங்காவில் இருந்து பெசண்ட் அவென்யூ வழியாக பேருந்து நிலையம் செல்ல மாநகர பேருந்துகளுக்கு அனுமதியில்லை.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்