இந்த புயலால் அந்தமான் நிகோபார் தீவுகளில் 80 கி.மீ வேகத்தில் காற்று வீசும். இதனால் பலத்த மழை பெய்து, வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்று வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. இந்த புயல் வரும் 11ஆம் தேதி, சென்னைக்கும், ஆந்திராவிற்கும் இடையே கரையை கடக்கிறது. அப்போது மணிக்கு 130கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்யும்.