கூவத்தில் குதித்து எஸ்கேப்; விடாமல் துரத்திய போலீஸ்! – சென்னையில் கொள்ளையர்கள் கைது!

செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (09:58 IST)
மருந்து கடையில் கொள்ளையடித்து விட்டு கூவத்தில் குதித்த கொள்ளையர்களை போலீஸார் விரட்டி பிடித்துள்ளனர்.
கோப்புப் படம்

சென்னை கீழ்பாக்கம் ஹாரிங்டன் சாலையில் உள்ள மருத்துக்கடை ஒன்றின் பூட்டை உடைத்த கொள்ளையர்கள் இருவர் அதிலிருந்து ஒன்றரை லட்ச ரூபாய் பணத்தை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் கொள்ளையர்களை தேட தனிப்படை அமைத்தனர்.

இந்நிலையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது 20 வயதான ராஜேஷ் மற்றும் விஜயகுமார் என தெரியவந்துள்ளது. அவர்களை பிடிக்க போலீஸார் முயற்சிக்கையில் உஷாரான கொள்ளையர்கள் கூவத்தில் குதித்து தப்பியோடியுள்ளனர். விடாமல் போலீஸாரும் கூவத்தில் குதித்து கொள்ளையர்களை துரத்தி பிடித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்