கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை பெட்ரோல் விலை தினமும் உயர்ந்து கொண்டே இருந்தது என்பதும் அதனால் பெட்ரோல் விலை 100 ரூபாய்க்கும் அதிகமானது என்பதும், டீசல் விலை 100 ரூபாயை நெருங்கி இருந்தது என்பது தெரிந்ததே
ஆனால் அதே நேரத்தில் தமிழக அரசு பெட்ரோலுக்கான வரி ரூபாய் மூன்று குறைந்ததை அடுத்து தமிழகத்தில் 100க்கும் குறைவாக பெட்ரோல் விலை விற்பனையாகி வந்தது. இந்த நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை இடையிடையே குறைத்து வருகிறது என்பதும் பல நாட்கள் ஒரே விலையில் விற்பனை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது