இந்நிலையில் சமீப காலமாக பெட்ரோல் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பலர் இரவு நேரங்களில் வளாகங்களில் நிறுத்தப்பட்டிருக்கும் இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்டவற்றிலிருந்து பெட்ரோல் திருடுவதாக புகார் எழுந்துள்ளது. சென்னை அம்பத்தூரில் குடியிருப்பு வளாகத்தில் மர்ம நபர் ஒருவர் நுழைந்து பைக்கிலிருந்து பெட்ரோல் திருடும் காட்சிகள் வெளியாகியுள்ளன. பெட்ரோல் விலை உயர்வால் திருட்டு சம்பவம் அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.