சென்னை ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்டரில் சுட்டுக்கொலை! பெரும் பரபரப்பு..!

Siva

புதன், 18 செப்டம்பர் 2024 (07:05 IST)
சென்னை பிராட்வே காக்கா தோப்பு பகுதியில் உள்ள பி.ஆர்.என் கார்டன், வள்ளுவர் நகரத்தைச் சேர்ந்த ராமலிங்கத்தின் மகன் பாலாஜி. 36 வயதுடைய இவர், சரித்திர குற்றவாளி ஆவார். பல்வேறு கொலை, ஆள்கடத்தல் உள்ளிட்ட 50 வழக்குகள் இவருக்கு எதிராக நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், இன்று அதிகாலை சென்னை வியாசர்பாடி குடியிருப்பு அருகே போலீசார் சுற்றி வளைத்து, அவரை என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர். பாலாஜியின் உடல் தற்போது சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. என்கவுன்டரின் காரணம் குறித்து போலீஸ் தரப்பில் இன்னும் விளக்கங்கள் வெளியிடப்படவில்லை.

முதல் தகவல்கள் கூறுவதாவது, காக்கா தோப்பு பாலாஜியை கைது செய்யச் சென்றபோது இந்த என்கவுன்டர் நடந்ததாக கூறப்படுகிறது.

பிரபல தாதாவாக சென்னையில் அறியப்பட்ட ரவுடி காக்கா தோப்பு பாலாஜி, பலமுறை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர். அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்திருந்ததுடன், பெட்ரோல் குண்டு வீசியது உள்ளிட்ட பல வழக்குகளில் போலீசாரால் தொடர்ந்து தேடப்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்