சென்னையில் விடிய விடிய கனமழை: இன்றும் மழை தொடருமா?

Webdunia
வெள்ளி, 9 ஜூலை 2021 (07:44 IST)
சென்னையில் நேற்று மழை பெய்யும் என ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்த நிலையில்  சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வந்தது சென்னையில் உள்ள முக்கிய பகுதிகளில் நல்ல மழை பெய்தது அடுத்து சாலைகளில் மழை நீர் தேங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
சென்னை மட்டுமின்றி புறநகர் பகுதிகளிலும் நல்ல மழை பெய்து உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. தமிழ்நாட்டின் பல இடங்களில் இப்போது மழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்று பகலிலும் மாலையிலும் இரவிலும் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக இந்த மழை பெய்து வருவதாகவும் இன்னும் ஓரிரு நாட்களுக்கு சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
சென்னையில் விடிய விடிய மழை பெய்ததை அடுத்து சென்னை நகரமே தற்போது குளிர்ச்சியாக காணப்படுவதால் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்