அதெப்படி 10 நிமிஷத்துல டெலிவரி செய்வீங்க..? – ஸொமோட்டோவிடம் விளக்கம் கேட்க முடிவு!

வியாழன், 24 மார்ச் 2022 (09:56 IST)
உணவு பொருட்களை ஆர்டர் செய்து 10 நிமிடத்திற்குள் டெலிவரி செய்வதாக சொமோட்டோ விளம்பரம் செய்துள்ளது குறித்து போக்குவரத்து போலீஸ் விளக்கம் கேட்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் ஆன்லைன் உணவு டெலிவரி செயலிகள் முக்கியமான நிறுவனமாக உள்ளது ஸொமோட்டோ. இந்நிலையில் சமீபத்தில் உணவு மற்றும் உணவு பொருட்கள் ஆர்டர் செய்த 10 நிமிடத்திற்குள் டெலிவரி செய்யப்படுவதாக சொமோட்டோ நிறுவனம் விளம்பரம் செய்திருந்தது.

இந்த அறிவிப்புக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் சொமோட்டோவின் இந்த அறிவிப்பு குறித்து உரிய விளக்கம் அளிக்கக்கோரி அந்நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உள்ளதாக சென்னை போக்குவரத்து போலீஸார் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்