சென்னை மெட்ரோ ரயிலில் பார்க்கிங் கட்டணம் திடீர் உயர்வு.. ஆனால்..
திங்கள், 12 ஜூன் 2023 (07:50 IST)
சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யாமல் பார்க்கிங் மட்டுமே பயன்படுத்தும் நபர்களுக்கு பார்க்கிங் கட்டணம் உயர்த்தப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யாமல் பார்க்கிங் மட்டுமே பயன்படுத்துவோருக்கு கட்டணம் உயர்வு என்றும் இந்த கட்டண உயர்வு ஜூன்.14ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் பார்க்கிங் கட்டணம் 6 மணி நேரத்திற்கு ரூ.20 ஆகவும், 12 மணி நேரத்திற்கு ரூ.30 ஆகவும், அதற்கு மேல் ரூ40 ஆகவும் உயர்வு என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஆனால் அதே நேரத்தில் மெட்ரோவில் பயணிப்பவர்களுக்கு முந்தைய கட்டணமே தொடரும் என்றும் மெட்ரோ நிர்வாகம் கூறியுள்ளது