அசராமா சிட்டி முழுவதும்... மெட்ரோ நிர்வாகம் புது அறிவிப்பு!!

வியாழன், 10 செப்டம்பர் 2020 (08:52 IST)
இன்று முதல் சென்னையில் அனைத்து வழித்தடங்களிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகிறது என தகவல். 
 
சென்னையில் கடந்த 7 ஆம் தேதி முதல் மெட்ரோ ரயில்கள் இயங்கி வருகிறது என்பது தெரிந்ததே. முதல் கட்டமாக விமான நிலையம் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலான மெட்ரோ ரயில் இயக்கப்பட்டது. அதன் பின்னர் சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையிலான மெட்ரோ ரயில் இயக்கப்பட்டது. 
 
அதேபோல காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மெட்ரோ ரயில் பொதுமக்களின் கோரிக்கையை அடுத்து இன்று முதல் 9 மணி வரையில் அனைத்து வழைதடங்களில் மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்