ஆன்லைன் வகுப்புக்கு தடையில்லை! - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

புதன், 9 செப்டம்பர் 2020 (11:14 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 5 மாதங்களாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் எந்த பள்ளிகளும் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து கடந்த இரண்டு மாதங்களாக அனைத்து பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. 
 
ஆனால் இந்த ஆன்லைன் வகுப்புகளால் ஏற்றத்தாழ்வு ஏற்படுவதாகவும் ஸ்மார்ட் போன் இல்லாத மாணவர்கள் மன அழுத்தத்தில் இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. அதுமட்டுமின்றி ஆன்லைன் வகுப்பு புரியாததால் ஒரு சில மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட செய்திகளும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 
 
இந்த நிலையில் ஆன்லைன் அமைப்புக்கு தடை கோரி பொதுநல வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் இரு தரப்பு விசாரணையும் முடிவடைந்த நிலையில் சற்று முன்னர் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது
 
இந்த தீர்ப்பில் பள்ளி மாணவர்களின் ஆன்லைன் வகுப்புக்கு தடை இல்லை என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் வகுப்புகளுக்கு தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தாலும், ஆன்லைன் வகுப்பு நேரத்தை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் மாவட்ட தலைமையகத்தில் கண்காணிக்க குழு அமைக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்