11 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 3 அக்டோபர் 2021 (13:22 IST)
வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் குமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நீலகிரி, கோவை, ஈரோடு மற்றும் புதுக்கோட்டை ஆகிய 11 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அதே போல் நாளை புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, குமரி, நெல்லை, தென்காசி, கோவை, நீலகிரி, ஈரோடு, விருதுநகர், திருச்சி மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அதேபோல் அக்டோபர் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் டெல்டா மாவட்டங்கள் உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மிக கன மழையும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னையை பொருத்தவரை அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்