கொரோனா வார்டுகளாக மாறும் சென்னை திருமண மண்டபங்கள்

ஞாயிறு, 3 மே 2020 (16:50 IST)
சென்னையில் கடந்த 4 நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஜெட் வேகத்தில் அதிகரித்து கொண்டே செல்கிறது. குறிப்பாக நேற்று மட்டும் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 170ஐ தாண்டியது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றும் அதே அளவுக்கு அல்லது அதைவிட அதிகமான எண்ணிக்கையில் இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.
 
இந்த நிலையில் சென்னையில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா வார்டு முழு அளவில் நிரம்பி விட்டதால் மாற்று ஏற்பாடு செய்ய சென்னை மாநகராட்சி தீவிர ஆலோசனை செய்தது. அதன்படி தற்போது எடுத்துள்ள புதிய முடிவின்படி சென்னையில் உள்ள அனைத்து திருமண மண்டபங்களிலும் கொரோனா வார்டாக மாற்ற முடிவு செய்துள்ளது
 
இதனையடுத்து சென்னை திருமண மண்டப உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நோட்டீசில் சென்னையில் கொரோனா வார்டு கூடுதலாக அமைக்க இருப்பதால் திருமண மண்டபங்களை தருமாறு கோரப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதனால் சென்னை திருமண மண்டப உரிமையாளர்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
ஏற்கனவே விஜயகாந்த் உள்பட ஒருசில பிரமுகர்கள் கொரோனா வார்டாக மாற்ற தங்களது திருமண மண்டபங்களை அளிக்க முன்வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் மற்ற திருமண மண்டப உரிமையாளர்களும் தங்களது திருமண மண்டபங்களை கொரோனா வார்டாக  மாற்ற தங்களது திருமண மண்டபங்களை கொடுத்து உதவி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்துள்ளது. இந்த கோரிக்கைகளை திருமண மண்டப உரிமையாளர்கள் ஏற்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்