லைகா தொடர்ந்த வழக்கு ஒன்றில் நடிகர் விஷாலை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி, விஷாலை கண்டித்ததாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராகவும், தயாரிப்பாளராகவும் உள்ளவர் நடிகர் விஷால். அதுமட்டுமல்லாமல் தென்னிந்திய நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் சார்ந்த பொறுப்புகளிலும், செயல்பாடுகளிலும் விஷால் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நடிகர் விஷால், லைகா நிறுவனத்துடன் பட ஒப்பந்தம் செய்ததாகவும், தற்போது அந்த ஒப்பந்தத்தை மீறி அவர் செயல்பட்டு வருவதாகவும் லைகா தரப்பில் விஷால் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணையின்போது நடிகர் விஷால் நீதிபதியை பாஸ் என்று அழைத்ததாக கூறப்படுகிறது. அதற்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.டி.ஆஷா “நீதிபதியை பாஸ் என்றெல்லாம் அழைக்கக் கூடாது. கேட்கும் கேள்விகளுக்கு ஆம், இல்லை என்றுதான் பதில் சொல்ல வேண்டும்” என கண்டித்துள்ளார்.
மேலும் இந்த வழக்கின் குறுக்கு விசாரணையை ஒத்தி வைத்து நடிகர் விஷால் நேரில் ஆஜராகும்படி நீதிபதி உத்தரவிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
Edit by Prasanth.K