இந்தியாவிலேயே அதிக தடுப்பூசி போட்ட நகரம் சென்னை தான்: மாநகராட்சி ஆணையர் தகவல்

Webdunia
வெள்ளி, 28 மே 2021 (07:47 IST)
இந்தியாவில் உள்ள பெருநகரங்களில் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அதிக தடுப்பூசி போட்ட நகரம் சென்னை தான் என சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் 
கொரோனா வைரஸ் தடுப்பூசி நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாகக் செலுத்தப்பட்டு வரும் நிலையில் சென்னையில் மாநகராட்சி ஆணையர் சுகன் தீப்சிங் அவர்கள் பதவியேற்றதிலிருந்து தடுப்பூசி போடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள பல பகுதிகளில் சிறப்பு முகாம்கள் அமைத்து தடுப்பூசி போடப்பட்டு வருகிறது என்பதும் பொது மக்களும் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசியை செலுத்தி கொள்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்தியாவில் உள்ள பெருநகரங்களில் சென்னையில் மட்டும் தான் 55 சதவிகித 45 வயது மேலானவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் இது மற்ற பெரு நகரங்களில் தடுப்பூசி போடப்பட்ட சதவீதங்களை விட மிக அதிகம் என்றும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னை மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் இதே போன்று அதிக அளவில் தடுப்பூசி போடப்பட்டு கொரோனாவில் இருந்து காப்போம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது பெரும் நம்பிக்கைக்கு உரியதாக உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்