ஆசிரியர்கள் பணியில் நீடிக்க தகுதித் தேர்வு கட்டாயமில்லை: சென்னை உயர் நீதிமன்றம்

Webdunia
வெள்ளி, 2 ஜூன் 2023 (12:22 IST)
2011ம் ஆண்டுக்கு முன் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் பணியில் நீடிக்க தகுதி தேர்வு கட்டாயம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 
 
கடந்த 2009 ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த கல்வி உரிமை சட்டத்தின் படி ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே ஆசிரியர்களாக நீடிக்க முடியும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 
 
இந்த நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என கூறி 2011 ஆம் ஆண்டுக்கு முன் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் வருடாந்திர ஊதிய உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. 
 
இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்ட நிலையில் 2011 ஆம் ஆண்டுக்கு முன்பு நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்காவிட்டாலும் ஆசிரியர் பணியில் நீடிக்கலாம் என உத்தரவிட்டது. ஊதிய உயர்வு பெற ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் இல்லை என நீதிபதிகள் இந்த தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்