கள் விற்பனைக்கு விதித்த தடையை நீக்குவது குறித்து பரிசீலிக்கலாமே? சென்னை உயர்நீதிமன்றம்

Mahendran

திங்கள், 22 ஜூலை 2024 (12:11 IST)
தமிழ்நாட்டில் கள் விற்பனைக்கு விதித்த தடையை நீக்குவது குறித்து ஏன் மறுபரிசீலனை செய்யக்கூடாது என  சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து ஜூலை 29ம் தேதிக்குள் விளக்கமளிக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனையடுத்து மதுபானங்களை சூப்பர் மார்க்கெட்டுகள், ரேஷன் கடைகளில் விற்க அனுமதி வழங்கக் கோரிய வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 
டாஸ்மாக்கில் மது விற்பனை செய்வதற்கு பதிலாக, சூப்பர் மார்க்கெட் மற்றும் ரேஷன் கடைகள் மூலமாக மதுபான விற்பனை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும், கள் விற்பனைக்கு விதித்த தடையை நீக்கக் வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
 
சென்னையைச் சேர்ந்த ஐ.டி. ஊழியர் முரளிதரன் என்பவர் தாக்கல் செய்த இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவில், டாஸ்மாக் கிற்கு மதுபானம் சப்ளை செய்யும் நிறுவனங்கள், பெரும்பாலும் ஆளுங்கட்சி பிரமுகர்களுக்கு சொந்தமானதாக இருப்பதாகவும், இதனால் டாஸ்மாக் நிர்வாகம் குறிப்பிட்ட சில பிராண்ட் மதுபானங்களை மட்டும் விற்பனை செய்வதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளது.
 
அதேபோல் 1986ஆம் ஆண்டு கள் விற்பனைக்கு தடை விதித்து மதுவிலக்கு சட்டத்தில் கொண்டு வரப்பட்ட நிலையில், கள் விற்பனை செய்வதற்கும் அனுமதி அளிக்க வ் ஏண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்