நாளை ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில் எதிர்கட்சிகள் நாடாளுமன்ற நேரத்தை வீணடிக்கக்கூடாது என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
2024ம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை நாடாளுமன்றத்தில் நடைபெற உள்ளது. முன்னதாக அமைச்சர்கள், எதிர்கட்சி தலைவர்கள், எம்பிக்கள் பதவியேற்பு மற்றும் விவாதத்திற்காக நாடாளுமன்றம் கூடிய நிலையில் எதிர்கட்சிகள் பலரும் நீட் எதிர்ப்பு, மணிப்பூர் வன்முறை உள்ளிட்ட பல விஷயங்களுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் முழக்கங்களை எழுப்பினர்.
இந்நிலையில் நாளை தொடங்க உள்ள பட்ஜெட் கூட்டத்தொடருக்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் “தங்களது ஏமாற்றத்தால் சிலர் நாடாளுமன்றத்தின் நேரத்தை வீணடிக்கின்றனர். நாடாளுமன்றத்தில் அரசியல் தொடர்பான பேச்சுகள் வேண்டாம். அதை தேர்தலின்போது வைத்துக் கொள்ளலாம்.
அரசின் குரலை நசுக்குவது ஜனநாயகத்திற்கு எதிரான செயல். சிலர் தோல்வியால் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக நாடாளுமன்ற நேரத்தை வீணடிக்கிறார்கள். ஏமாற்றம் காரணமாக எல்லா விவகாரங்களிலும் எதிர்மறையான கருத்துகளை தெரிவிப்பது சரியான அணுகுமுறை கிடையாது” என்று கூறியுள்ளார்.
Edit by Prasanth.K