தனித்தேர்வுகளுக்கு தேர்வுக்கு தடை கிடையாது! – மீண்டும் மறுத்த உயர்நீதிமன்றம்!

ஞாயிறு, 20 செப்டம்பர் 2020 (15:10 IST)
தமிழகத்தில் கொரோனா காரணமாக 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி அளிக்கப்பட்ட நிலையில் தனித்தேர்வர்களுக்கு தேர்வுக்கு தடை விதிக்கமுடியாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி வழங்கப்பட்டது. இந்நிலையில் நேரடியாக பள்ளி மூலமாக அல்லாமல் தனிதேர்வு முறையில் விண்ணப்பித்திருந்த மாணவர்களும் தங்களுக்கு தேர்ச்சி அளிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர். தனித்தேர்வு எழுதுபவர்களில் பல மாற்று திறனாளி மாணவர்களும் இருப்பதால் கொரோனா காலத்தில் நேரில் சென்று தேர்வு எழுதுவது கடினம் என்று கூறப்பட்டது.

இதன் மீதான விசாரணையில் தமிழக அரசு விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த வழக்கில் விளக்கம் அளித்துள்ள தமிழக அரசு மாற்று திறனாளி மாணவர்களுக்கு வீட்டிற்கே சென்று கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாகவும், அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது. அதை தொடர்ந்து தனித்தேர்வர்களுக்கான தேர்வு மீது தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்