சென்னையை மூன்றாக பிரிக்க திட்டமா?

திங்கள், 16 செப்டம்பர் 2019 (21:02 IST)
கடந்த சில மாதங்களாக தமிழகத்தின் ஒருசில மாவட்டங்கள் இரண்டாகவும் மூன்றாகவும் பிரிக்கப்பட்டு வரும் நிலையில் நிர்வாக வசதிக்காக சென்னையை மூன்று மாவட்டமாகவோ அல்லது மூன்று மாநகராட்சியாகவோ பிரிக்க தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆனால் அவ்வாறு பிரித்தால் மத்திய அரசு அளிக்கும் நிதிப்பங்களிப்பு குறையும் என்றும், இதனால் நிர்வாகச் சிக்கல் ஏற்படும் என்றும் முன்னாள் சென்னை மேயர் மா.சுப்பிரமணியம் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
 
 
நிர்வாக வசதிக்காக ஆவடியைத் தலைமையாகக் கொண்டு ஒரு மாநகராட்சியையும் தாம்பரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு ஒரு மாநகராட்சியையும் உருவாக்கிவிட்டு சென்னை மாநகராட்சியை அப்படியே விட்டுவிட வேண்டும் என்பதே தனது கருத்து என்றும் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
 
 
இந்தியாவிலுள்ள பெருமாநகராட்சிகளான டெல்லி, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு ஆகிய மாநகராட்சிகள் சென்னையை விடப் பரப்பளவில் அதிகம் இருந்தாலும் பிரிக்கப்படாமல் நிர்வாகம் செய்யப்பட்டு வரும் நிலையில்  174 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட சென்னை மாவட்டம் பிரிக்கக்கூடாது என்பதே பொதுமக்களின் எண்ணமாக உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்