உத்தர பிரதேசத்தின் பல பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்து மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் வெள்ளத்தில் குளியல் போட்டு ஜாலி வீடியோ வெளியிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வடமாநிலங்களில் கனமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் பகுதியில் கங்கை வெள்ளம் கரைப்புரண்டு ஓடி வரும் நிலையில் பல குடியிருப்புகள் நீரில் மூழ்கியுள்ளன.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான மீட்பு பணிகள், நிவாரண உதவிகள் சரியாக கிடைக்கவில்லை என மக்கள் ஆங்காங்கே புகார் தெரிவித்து வரும் நிலையில், வெள்ளத்தில் ஜாலி டைவ் அடித்தப்படி “ஏங்கக.. ப்ரயாக்ராஜ் ஒரு ஐலேண்டுங்க” என்ற ஸ்டைலில் வீடியோ போட்டுள்ளார் ப்ரயாக்ராஜ் சப் இன்ஸ்பெக்டர் சந்திரதீப் நிஷாத்.
கங்கை நதியானது கங்கா தேவி. புனிதமானது என்றும், அவள் நமது வீடு தேடி வரும்போது விரட்டக் கூடாது என்று கூறி வீட்டுக்குள் புகுந்த ஆற்று வெள்ளத்திற்கு பூ தூவி, பால் ஊற்றி வரவேற்றுள்ள அவர், கங்கா தேவி மீது குதித்து வெளியிட்ட வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. அதேசமயம் இது பலரது கண்டனங்களுக்கும் உள்ளாகி வருகிறது.
Edit by Prasanth.K