நீங்கள் உண்மையிலேயே இந்தியரா? ராகுல் காந்தியிடம் சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி..!

Mahendran

திங்கள், 4 ஆகஸ்ட் 2025 (13:49 IST)
இந்திய-சீன எல்லை விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி எழுப்பிய கருத்துக்களுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. "நீங்கள் ஒரு உண்மையான இந்தியராக இருந்தால் இப்படிப் பேச மாட்டீர்கள்" என்று நீதிபதிகள் விமர்சித்துள்ளனர்.
 
ராகுல் காந்தியின் சீனா குறித்த சர்ச்சைக்குரிய  பேச்சு குறித்து லக்னோ நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு விசாரணையில் உள்ளது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அவர் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் ஏ.ஜி. மாய்ஸ் விசாரித்தனர்.
 
"நாட்டின் மீது உண்மையான பற்று இருந்தால் இவ்வாறு பேச மாட்டீர்கள். எதிர்க்கட்சித் தலைவராக இதுபோன்ற விஷயங்களைச் சமூக வலைத்தளங்களில் ஏன் பதிவிடுகிறீர்கள்? பாராளுமன்றத்தில் எழுப்பலாமே?" என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
 
 "சீனா 2,000 கி.மீ. பரப்பளவை ஆக்கிரமித்துள்ளது என்று எந்த ஆதாரத்தின் அடிப்படையில் சொல்கிறீர்கள்? உங்களிடம் நம்பகமான ஆதாரங்கள் உள்ளதா?" என்றும் நீதிபதிகள் கேட்டனர்.
 
 "கருத்து சுதந்திரம் என்ற பெயரில் எதையும் பேசக்கூடாது" என்றும் நீதிபதிகள் கண்டித்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்