சென்னையில் 350 கடைகளுக்கு சீல்: 3 மாதங்களுக்கு திறக்க முடியாது

வியாழன், 30 ஏப்ரல் 2020 (16:45 IST)
சென்னையில் 350 கடைகளுக்கு சீல்
சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருவது தெரிந்ததே. குறிப்பாக நேற்றும் நேற்று முன்தினமும் சுமார் 100 பேர்கள் சென்னையில் மட்டும் கொரோனா வைரஸால் தாக்கப்பட்டதாக வெளிவந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்திலேயே சென்னையில் தான் மிக அதிகமாக கொரோனா வைரஸால் தாக்கப்பட்டவர்கள் இருப்பதால் சென்னையில் ஊரடங்கு உத்தரவை கடுமையாக கடைபிடிக்க காவல் துறை முடிவு செய்தது 
 
இந்த நிலையில் சென்னையில் நேரக்கட்டுப்பாட்டை பின்பற்றாமல் பல கடைகள் இயங்கி வருவதாக காவல்துறைக்கு செய்தி வெளிவந்தது. இதனையடுத்து நகர் முழுவதும் காவல்துறையினர் உதவியுடன் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சோதனையிடப்பட்டதில் நேரக்கட்டுப்பாட்டை பின்பற்றாமல் 350 கடைகள் இயங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த 350 கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது.
 
நேரக்கட்டுப்பாட்டை பின்பற்றாமல் சீல் வைக்கப்பட்ட இந்த 350 கடைகளும் இன்னும் மூன்று மாதங்களுக்கு திறக்க அனுமதி இல்லை என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அவர்கள் தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி நேரக்கட்டுப்பாட்டை சரியாக கடைபிடிக்காமல் இயங்கும் கடைகளுக்கு சீல் வைப்பதோடு அதன் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்