மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயம்: சென்னை மாநகராட்சி திடீர் உத்தரவு

Webdunia
வியாழன், 16 ஜூன் 2022 (18:21 IST)
சென்னை மாநகராட்சியில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது
 
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதும் குறிப்பாக சென்னையில் மிக அதிகமாக பரவி வருகிறது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை முதல் பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ள நிலையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கல்வி நிறுவன மாணவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று சென்னை மாநகராட்சி திடீரென உத்தரவு பிறப்பித்துள்ளது
 
மேலும் மாணவ மாணவிகளுக்கு காய்ச்சல் இருமல் தொண்டை வலி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் உடனடியாக கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்