போலீஸ் தடுத்தால் காய்கறி வியாபாரிகள் புகார் அளிக்கலாம்! – சென்னை மாநகராட்சி அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 25 மே 2021 (12:03 IST)
தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் காய்கறி விற்பவர்கள் காவல் துறையினரால் தடுக்கப்பட்டால் புகார் அளிக்க சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அத்தியாவசிய பொருட்களான காய்கறி, பழங்கள் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய தமிழக அரசு மூன்று சக்கர வாகனங்கள், தள்ளு வண்டிகளில் பழங்கள், காய்கறிகளை விற்க அனுமதித்துள்ளது.

இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் காய்கறி விற்கும்போது போலீஸார் தடுத்தால் புகார் அளிப்பதற்கான எண் வெளியிடப்பட்டுள்ளது. மூன்று சக்கர வாகனங்கள், தள்ளு வண்டியில் காய்கறி விற்பவர்கள் போலீஸார் இடை மறித்தால் 044-4568 0200, 94999 32899 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்