இதனால் தமிழகத்தில் காலை ஒரு மணி நேரமும், இரவு ஒரு மணி நேரமும் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மற்ற நேரங்களில் பட்டாசுகள் வெடிப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சொல்லப்பட்டது. இந்நிலையில் சென்னையில் இதுபோல அனுமதிக்கப்பட்ட நேரம் அல்லாது மற்ற நேரத்தில் வெடித்த 348 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தீபாவளியால் பட்டாசு வெடித்ததில் மட்டும் சென்னையில் 18 டன் குப்பைகள் உருவாகியுள்ளன. இதுபற்றி சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவலில் 3, 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் சுமார் 18.673 டன் அளவுக்கு பட்டாசு கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.