மேலும் ஒரு மாநில முதல்வருக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி!

ஞாயிறு, 15 நவம்பர் 2020 (16:54 IST)
மேலும் ஒரு மாநில முதல்வருக்கு கொரோனா:
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் சாதாரண பொதுமக்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்கள், அரசியல்வாதிகள் மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் எம்பிக்கள் என பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் ஏற்கனவே ஒரு சில மாநில முதலமைச்சர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமாகிய நிலையில் தற்போது மணிப்பூர் மாநில முதல்வர் பைரோன் சிங் அவர்களுக்கும், கொரோனா பாதிப்ப்பு ஏற்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
பாஜகவை சேர்ந்த பைரோன் சிங் என்பவர் மணிப்பூர் மாநிலத்தில் முதல்வராக உள்ளார். இவர் தனக்கு கொரோனா பாசிட்டிவ் ஏற்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து தன்னுடன் கடந்த சில நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப் படுத்திக் கொண்டு பரிசோதனை செய்து கொள்ளவும் என்றும் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்
 
மணிப்பூர் மாநில முதல்வருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்