சென்னையில் கொரோனா நோயாளி தப்பியோட்டம்: தொடரும் எஸ்கேப் சம்பவங்கள்!

Webdunia
வெள்ளி, 15 மே 2020 (11:33 IST)
சென்னையில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் மருத்துவமனையிலிருந்து கொரோனா நோயாளி ஒருவர் தப்பியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் மூன்றாம் கட்ட ஊரடங்கு 17ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வருகிறது. ஆனால் சென்னையில் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் சென்னையில் கொரோனா பாதித்து அனுமதிக்கப்பட்ட பலர் மருத்துவமனையில் இருந்து தப்பியோடும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

சில வாரங்களுக்கு முன்பு ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்த கொரோனா பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் தப்பியோடிய செய்தி வெளியானது. இந்நிலையில் தற்போது சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இருந்து கொரோனா நோயாளி ஒருவர் தப்பியுள்ளார். தப்பி சென்றவர் கோயம்பேடு சந்தையில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. நோயாளியின் வீடு சின்மயா நகரில் உள்ளதால் அந்த பகுதியில் அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்