பாதிக்கப்பட்ட தமிழகம்? நீட்டிக்கப்படுமா ஊரடங்கு? – தமிழகம் இன்று ஆலோசனை!

திங்கள், 20 ஏப்ரல் 2020 (10:33 IST)
கொரோனா காரணமாக அமலில் உள்ள ஊரடங்கில் தேவையான தளர்வுகளை அளிக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் தமிழகத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இன்று முதல் ஊரடங்கில் சில தளர்வுகள் வழங்கப்படும் என அறிவித்திருந்த மத்திய அரசு, தேவையான தளர்வுகளை மாநில அரசே அறிவித்துக் கொள்ளவும் அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில் என்னென்ன தளர்வுகளை அறிவிக்கலாம் என்பது குறித்து தமிழக அரசு இன்று ஆலோசனை நடத்த உள்ள சூழலில் அறிவிப்பு வெளியாகும் வரை தற்போதைய ஊரடங்கு விதிகள் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சில மாவட்டங்களை தவிர பல்வேறு மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு உள்ளது. அதனால் மாவட்டங்களை மூன்று வண்ண மண்டலங்களாக பிரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஊரடங்கு முடியும் வரை அனைத்து போக்குவரத்துகளுக்கும் தடை தொடரும் என்றும், மண்டலங்களை பொறுத்து மக்களுக்கு வேலைக்கு செல்வது, தொழிற்சாலைகள் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு அனுமதிகள் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்திற்கு பிறகும் கொரோனா முழுமையாக குறையும் வரை இந்த மண்டல வாரியான செயல்பாடு நடைமுறையில் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்