”எனக்கு வாழ பிடிக்கவில்லை” – கடிதம் எழுதி சிறுவன் தற்கொலை!

வியாழன், 10 பிப்ரவரி 2022 (11:43 IST)
சென்னை வானகரம் பகுதியில் 13 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வானகரம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 13 வயது சிறுவன் ஒருவன் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளான். கடந்த சில தினங்களாக சிறுவன் மனசோர்வாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு பேற்றோர்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போது, “இந்த உலகத்தில் எனக்கு வாழ பிடிக்கவில்லை. அதனால் தற்கொலை செய்துக் கொள்கிறேன்” என கடிதம் எழுதிவைத்துவிட்டு, 5வது மாடியில் இருந்து சிறுவன் குதித்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளான்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்