நேற்றுடன் முடிந்தது சென்னை புத்தக கண்காட்சி: புத்தக விற்பனை எத்தனை கோடி?

Siva

திங்கள், 22 ஜனவரி 2024 (07:56 IST)
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள், பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து சென்னையில் நடத்திய 47வது புத்தக கண்காட்சி ஜனவரி 3 ஆம் தேதி தொங்கி  நேற்றுடன் முடிந்தது
 
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் சென்னை புத்தக கண்காட்சியை பார்க்க வந்தனர். இந்த புத்தக கண்காட்சி வெற்றிகரமாக நடந்தது குறித்து பப்பாசி தலைவர் கவிதா சொக்கலிங்கம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 
புத்தக கண்காட்சி மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது, வாசகர்கள் மழையிலும் குடை பிடித்துக்கொண்டு வந்தது மகிழ்ச்சியாக இருந்தது. மழையின் போதும் நீண்ட வரிசையில் நிற்கும் அளவுக்கு வாசகர்கள் வந்து புத்தகங்களை வாங்கினர். மேலும்  ஒவ்வொரு பதிப்பகமும் புதிய புத்தகங்களை வெளியிட்டுள்ளது.
 
இந்த புத்தக கண்காட்சிக்கு 11 லட்சம் வாசகர்கள் வந்துள்ளார்கள். 10 லட்சம் மாணவர்களுக்கு இலவச டிக்கெட் வழங்கப்பட்டது. சுமார் ரூ.11 கோடிக்கு மேல் புத்தகங்கள் விற்பனையானது. இந்த தொகை கடந்தாண்டை விட அதிகம் என கூறினார்
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்