சென்னையின் பாஜக வேட்பாளர்கள் யார் யார்? கசிந்த தகவல்..!

Mahendran
செவ்வாய், 5 மார்ச் 2024 (16:51 IST)
சென்னை திமுகவின் கோட்டை என்று கூறப்படும் நிலையில் அந்த கோட்டையை தகர்க்க பாஜகவில் இருந்து வலிமையான வேட்பாளர்கள் சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளில் நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
 
மத்திய சென்னை பொருத்தவரை தயாநிதி மாறன் எம்பி ஆகவும் தென் சென்னையில் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களும், வட சென்னையில் கலாநிதி வீராசாமி ஆகியோர் கடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர் என்பதும் இந்த முறை தயாநிதி மாறனுக்கு சீட் உறுதி என்றாலும் மற்ற இருவருக்கு சீட் கிடைக்குமா என்று சந்தேகம் என்றும் திமுக வட்டாரங்களில் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சென்னையில் பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு விட்டதாகவும் கரு நாகராஜன், எஸ்ஜி  சூர்யா, டாக்டர் ஆனந்த பிரியா மற்றும் வினோத் பி செல்வம் ஆகிய நான்கு பேர்கள் சென்னையில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருப்பதாகவும் அதே போல் சமீபத்தில் பாஜக பக்கம் தாவிய விஜயதாரணி சென்னையில் உள்ள ஒரு தொகுதியை கேட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது

இந்த ஐந்து பேர்களில் மூன்று பேர்கள் தேர்வு செய்யப்பட்டு சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளில் போட்டியிடுவார்கள் என்றும் கூறப்படுகிறது. சென்னை பொறுத்தவரை அனைத்து தொகுதிகளும் திமுக கைவசம் இருக்கும் நிலையில் மீண்டும் திமுக வெற்றியை தக்க வைத்துக் கொள்ளுமா? அல்லது பாஜகவிடம் பறிகொடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்