தனியார் கல்லூரி மாணவி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை

வெள்ளி, 23 செப்டம்பர் 2016 (03:04 IST)
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே தனியார் கல்லூரி விடுதியில் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரைச் சேர்ந்த ஹேமமாலினி என்பவர் செங்கல்பட்டு அருகே தனியார் கல்லூரி ஒன்றின் விடுதியில் தங்கியிருந்து படித்து வந்துள்ளார்.
 
இந்நிலையில், இவர் கல்லூரி விடுதி அறையில் தனது துப்பட்டாவால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. சக மாணவிகள் அளித்த தகவலின் பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
 
மாணவியின் தற்கொலைக்கான காரணம் உடனடியாக தெரிய வரவில்லை. இது குறித்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்