அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீட்டுக்கு இடைக்கால தடையா?

செவ்வாய், 15 டிசம்பர் 2020 (12:56 IST)
மருத்துவப் படிப்பிற்காக நீட் தேர்வு எழுதிய அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு மசோதா சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது என்பது தெரிந்ததே. இதனை அடுத்து 400க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவ மாணவிகள் இந்த ஆண்டு மருத்துவ படிப்பு படிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என தனியார் பள்ளி மாணவி பூஜா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் 
 
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். மேலும் அரசு பள்ளி மாணவர்களை தங்கள் வீட்டு பிள்ளையாக பார்க்க வேண்டுமே தவிர எதிரியாக பார்க்க கூடாது என நீதிபதிகள் மனுதாரருக்கு அறிவுறுத்தல் செய்துள்ளார் 
 
அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர் நீ நீதி மன்றம் மறுப்பு தெரிவித்ததை அடுத்து அரசு பள்ளி மாணவ-மாணவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்