தலைகீழாக மாறிப்போன தலைமைச் செயலகம்

ஞாயிறு, 11 டிசம்பர் 2016 (11:13 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்த பின் தமிழக அரசியல் மட்டுமல்லாமால் அவர் வாழ்ந்த போயஸ் கார்டன் மற்றும் தலைமைச் செயலகத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது.


 

 
ஜெயலலிதா முதல்வராக இருந்த வரை தலைமைச் செயலகம் மிகுந்த கட்டுப்பாட்டுடன் இருக்கும். போலீசார் அதிகாரிகளின் கெடுபிடி அதிகமாக இருக்கும். அடையாள அட்டை இல்லாமல் யாரும் உள்ளே நுழைய முடியாது. 
 
அதேபோல், ஜெயலலிதா வரும் வழியில் அமைச்சர்கள் எவரும் தங்களின் வாகனங்களை நிறுத்த மாட்டார்கள். ஆனால் தற்போது எல்லாம் மாறிவிட்டது. 
 
ஜெ. மறைந்து முதல்வர் பதவி ஏற்றக் கொண்ட ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அதிமுக அமைச்சர்கள் நேற்று தலைமைச் செயலகம் வந்தனர்.  ஜெயலலிதா கார் வந்து சென்ற இடம்வரை, தற்போது அமைச்சர்களின் கார்கள் வந்தன. 
 
அதேபோல், காவல் துறை அதிகாரிகளின் கெடுபிடிகள் கொஞ்சம் தளர்ந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்