உலகில் மிகப்பெரிய ஜனநாயகத் தேர்தல் நம் தேசத்தில் நடைபெற்று வருகிறது. ஆறு கட்ட தேர்தல் நடைபெற்றுள்ளன. இன்னும் ஒரு கட்ட தேர்தல் நடைபெறவுள்ளன. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி மக்களவைத் தேர்தலுடன் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. இன்னும் 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது.