இன்று 10 மாவட்டங்களில் செம மழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம்!

Prasanth Karthick

சனி, 6 ஜனவரி 2024 (09:31 IST)
இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் பல மாவட்டங்களில் மிதமான அளவில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கடந்த சில காலமாக வடகிழக்கு பருவமழை காரணமாக நல்ல மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று வளிமண்டல சுழற்சி காரணமாக 10 மாவட்டங்களில் மிதமான மழை முதல் தூறல் மழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை மற்றும் குமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வட மாவட்டங்களான சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் மிதமான அளவில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்