அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் மழை

சனி, 25 நவம்பர் 2023 (13:39 IST)
தமிழக பகுதிகளின் மீது  வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழ் நாட்டில் கடந்த சில தினங்களாக வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது.

இந்த நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் லேசானது  முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை இன்று காலை வரை இயல்பைவிட குறைவாகவே பெய்திருப்பதாக கூறியுள்ளதது.

வழக்கமாக 33.1 மிமீ மழை பெய்திருக்க வேண்டிய நிலையில், அக்டோபர் 1 ஆம் தேதி முதல் இன்று வரை தமிழகத்தில் 294.8 மி.மீ மழையே பெய்துள்ளதாகவும் இது 11% குறைவாகப் பெய்துள்ளது என கூறியுள்ளது.

மேலும், இன்னும் 3 மணி நேரத்தில் தமிழ் நாட்டில் 11 மாவட்டடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்