இன்று சென்னையின் பல பகுதிகளில் அடுத்தடுத்து நடந்த நகை பறிப்பு சம்பவங்கள் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.
திருவான்மியூர் இந்திரா நகரில் வேலைக்கு சென்ற பெண்ணிடம் 5 சவரன் நகை பைக்கில் சென்ற மர்ம நபர்களால் பறிக்கப்பட்டது. சாஸ்திரி நகரில் பயிற்சி மேற்கொண்டிருந்த பெண்ணிடம் அரை சவரன், கிண்டியில் எம்.ஆர்.இ மைதானத்தில் நடைபயிற்சி சென்ற பெண்ணிடம் 5 சவரன் நகையும், சைதாப்பேட்டையில் பெண்ணிடம் 1 சவரன் நகையும், வேளச்சேரி பெண்ணிடம் 1 கிராமும், பள்ளிக்கரணையில் பெண்ணிடம் 1 சவரன் நகையும் மர்ம நபர்களால் பறிக்கப்பட்டுள்ளது.
இந்த தொடர் நகை பறிப்பு சம்பவங்கள் காலை 6 மணி முதல் 7 மணிக்குள் 1 மணி நேரத்தில் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸார் அனைத்து காவல் நிலையங்களிலும் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். தலைநகரமான சென்னையில் காலையிலேயே நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K