கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம்: மத்திய அரசின் அடுக்கடுக்கான கேள்விகள்!

Webdunia
புதன், 5 அக்டோபர் 2022 (16:53 IST)
வங்ககடலில் கருணாநிதிக்கு பேனா நினைவுச்சின்னம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ள நிலையில் இந்த சிலை குறித்து மத்திய அரசு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளது 
 
கடலிலிருந்து 8551 சதுர சதுர மீட்டர் அளவில் செயல்படுத்த உள்ள இந்த சிலை குறித்து சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு பொதுத் துறை பொதுப்பணித் துறைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது 
 
மேலும் இந்த சிலை அமைக்க பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்தா? என்று கேள்வி எழுப்பியுள்ள மத்திய அரசு பேனா நினைவுச் சின்னத்தை பார்வையிட வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு எந்த வகையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்ற கேள்வியையும் கேட்டு உள்ளது
 
மேலும் இந்த சிலையை பார்க்க பொதுமக்கள் வந்து இருந்த நேரத்தில் திடீரென சுனாமி புயல் ஏற்பட்டால் அங்கிருந்து வெளியேறுவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் என்னென்ன என்பது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்