தமிழகத்திற்கு ரூ.2,999 கோடியை விடுவித்தது மத்திய அரசு.. ஆர்ப்பாட்டத்திற்கு கிடைத்த பலன்?

Mahendran

வியாழன், 1 மே 2025 (12:00 IST)
கிராமப்புற மக்களின் வாழ்க்கையை உயர்த்தும் நோக்குடன் செயல்படுத்தப்பட்ட 100 நாள் வேலை திட்டத்தில், தமிழகத்திற்கான ரூ.2,999 கோடியை மத்திய அரசு தற்போது வழங்கியுள்ளது.

2005ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டம், தமிழகத்தில் 2008-09ம் ஆண்டு விரிவாக அமல்படுத்தப்பட்டது. இதில், பெண்கள் தங்கள் வீட்டு அருகாமையில் அதாவது 5 கிலோமீட்டர் சுற்றளவில்  வருடத்திற்கு 100 நாட்கள் வேலை பெறுவதே முக்கிய அம்சமாகும்.

இந்த திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 740 மாவட்டங்களில் சுமார் 13.42 கோடி பயனாளிகள் பணியாற்றி வருகின்றனர். ஆனால், கடந்த சில மாதங்களாக இந்த திட்டத்தின் கீழ் பணியாற்றியவர்களுக்கு ரூ.4,034 கோடி நிலுவையில் இருப்பதாக தமிழக அரசு குற்றம்சாட்டியது.

மத்திய அரசின் இந்த நிலைப்பாட்டுக்கு எதிராக திமுக எம்.பி.க்கள் பார்லிமென்டில் குரல் எழுப்பினர். இதுகுறித்து தமிழகத்தில் ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிடைத்த பலனாக மத்திய அரசு தற்காலிகமாக ரூ.2,999 கோடியை தமிழகத்துக்கு வழங்கியுள்ளது.  

இந்த நிதி ஒதுக்கீடு, 100 நாள் வேலைவாய்ப்பு தேடி காத்திருக்கும் பலரை நிம்மதிக்கு கொண்டு வந்துள்ளது.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்