கருத்து சுதந்திரத்தை கெடுக்கும் சென்சார் போர்ட்!

Webdunia
புதன், 7 செப்டம்பர் 2016 (19:01 IST)
இசக்கி கார்வண்ணன் என்பவர் இயக்கி இருக்கும் படம் ‘பகிரி’!


 


இப்படம் குறித்து இயக்குனர் கூறியதாவது, ”முன்பெல்லாம் மதுபானக்கடையில் வேலை பார்க்க தயங்குவார்கள். ஆனால் இப்போது இளைஞர்கள் மதுபானக்கடையில் பணிபுரிய விரும்புகிறார்கள். இப்படி ஒரு சூழ்நிலை ஏன் உருவானது என்று ‘பகிரி’ படம் பார்ப்பவர்களுக்கு புரியும்.

சென்சார் போர்டில் கீழ்மட்டத்தில் உள்ளவர்கள் ”இந்த படம் ரிலீஸானால் உங்களைக் கொன்று விடுவார்கள்” என்று நேரடியாகவே எச்சரித்தார்கள். நான் சிரிப்பை மட்டுமே பதிலாகத் தந்தேன்.

படத்தில் ஒரு காட்சியில் தமிழகத்தின் முக்கிய இரு தலைவர்கள் வேடம் அணிந்தவர்கள் டாஸ்மாக்கில் வந்து சரக்கு கேட்டு கெஞ்சுவதுபோல ஒரு காட்சி வரும். அதனை நீக்க சொன்னார்கள். நான் மறுத்தேன். மதுபானக்கடை என்ற படத்தில் கடவுள் வேடம் அணிந்தவர்களே குடிப்பது போல காட்டினார்கள். தலைவர்கள் என்ன கடவுள்களை விட பெரியவர்களா? என்று கேட்டேன். ஆனால் அதிகாரிகள் பிடிவாதமாக மறுத்துவிட்டார்கள். அந்த காட்சி உள்பட 18 காட்சிகளை வெட்டச் சொல்லிவிட்டார்கள்.

அப்படி செய்தும் கூட படத்துக்கு யு/ஏ சான்றிதழ் தான் கொடுத்திருக்கிறார்கள். மக்களுக்கு நல்லது சொல்லும் ஒரு படத்தை எடுத்தால் இதுதான் நிலைமையா? என்று வேதனையடைந்தேன்.” என்றார்.

இப்படம் வரும் 16 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இப்படத்தில் நாயகனாக பிரபு ரணவீரன் நடித்திருக்கிறார். இவர் விஜய் டிவியின் 'கனாக்காணும் காலங்கள் தொடரின் நாயகனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்