வீட்டிலிருந்து வெற்றியைக் கொண்டாடுங்கள் – ஸ்டாலின் வேண்டுகோள்

வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (19:38 IST)
கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது.

இந்தத் தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் திமுக இடையே பலத்த போட்டிகள் காணப்பட்டது. இதர கட்சிகளான சீமானின் நாம் தமிழர், தினகரனின் அமமுக, கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் கட்சிகளுக்கு மக்கள் மத்தியில் விழிப்புணர்வு இருந்தாலும் அரசியல் விமர்சகர்கள் திமுக அதிமுக கட்சிகளில் எதாவது ஒன்றுதான் ஆட்சிக்கு வரும் எனக் கணித்தனர்.

அதன்படி  தேர்தலுக்கு முந்தைய கருத்துகளைப் போல் நேற்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியானது.

அதில், ஸ்டாலின் தலைமையிலான திமுக கட்சி சுமார் 160 -170 இடங்கள் பெற்றித் தனிப்பெரும்பான்மையுடன்  ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.

இந்நிலையில் ஸ்டாலின் திமுக கட்சி ஆதரவாளர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் விரைவில் வெளிவரவுள்ளதை கழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்துள்ளதை நன் அறிவேன். திமுக கூட்டணி அதிக தொகுதிகளை கைப்பற்றும் என்கிற உற்சாகமான தகவல் பரவி வருகிறது.

எனவே தேர்தல் முடிவுகளை வீட்டிலிருந்த படி ஊடகங்கள் மூலம் தெரிந்து கொள்வோம். முடிவுகள் தெரிவித்து நம் வீட்டிலேயே மகிழ்ச்சியைக் கொண்டாடுவோம்,. கழக வெற்றியை விட உடன்பிறப்புகளின் உயிரைப் பாதுகாப்பதுதான் எனது நோக்காம இருக்கிறது. வீதிகள் வெறிச்சோடினாலும் உள்ளங்கள் மகிழ்ச்சியால் பொங்கட்டும் எனத் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்