வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறையில் மீண்டும் சிசிடிவி பழுது.. அதிர்ச்சி தகவல்..!

Mahendran

புதன், 8 மே 2024 (11:04 IST)
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி நடந்த நிலையில் தற்போது வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்ட்ராங் ரூமில் வைத்து சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் 24 மணி நேரமும் சிசிடிவி பாதுகாப்பு கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் அவ்வப்போது இந்த ஸ்ட்ராங் ரோமில் சிசிடிவி கேமராக்கள் பழுது ஆகி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது இன்னொரு இடத்திலிருந்து சிசிடிவி பழுதாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
ஏற்கனவே நீலகிரி தொகுதி, ஈரோடு மற்றும் தென்காசி ஆகிய தொகுதிகளில் உள்ள ஸ்ட்ராங் ரூமில் நூற்றுக்கணக்கான சிசிடிவிகள் பழுதாகி உள்ளதாக தகவல் வெளியான நிலையில் தற்போது அடுத்த கட்டமாக விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட ஸ்ட்ராங் அறையிலும் சிசிடிவி கேமராக்கள் பழுதாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
விழுப்புரம்  மக்களவை தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறையில் காலை 7.30 மணி முதல் 8.15 மணி வரை 45 நிமிடங்களுக்கு சிசிடிவி கேமராக்கள் பழுதாகி இருந்தது. ஆனால் உடனடியாக பழுது சரி செய்யப்பட்டு சிசிடிவி கேமராக்கள் மீண்டும் இயக்கப்பட்டன என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
கடந்த சில தினங்களுக்கு முன்பு இதே தொகுதியில் 30  நிமிடங்களுக்கு சிசிடிவி கேமராக்கள் பழுதானது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்