தலைமை நீதிபதி தஹில் ரமாணி மீதான வழக்கு சிபிஐக்கு மாற்றம்

Webdunia
திங்கள், 28 அக்டோபர் 2019 (19:35 IST)
சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி தஹில் ரமாணி மீது கூறப்பட்ட 2 குற்றஞ்சாட்டுகள் அடங்கிய வழக்கு இப்போது சி.பி.ஐ யிடம் மாற்றப்பட்டுள்ளது. 
 
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர் தஹில் ரமாணி. மும்பை உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக இருந்த அவர் கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார் 
 
ஓர் ஆண்டு கழித்து கடந்த மாதம் திடீரென்று அவர் மேகாலயா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டார். இந்த மாற்றத்திற்கு வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தினால் போராட்டம் நீதிபதி தஹில்ரமணி எதற்காக மாற்றப்பட்டார் என்பதை தெரிவிக்க வேண்டிய அவசியம் ஏற்படும் என்று உச்சநீதிமன்றம் எச்சரித்திருந்தது 
 
இந்த நிலையில் தஹில் ரமாணி மீது இரண்டு புகார்கள் கூறப்பட்டுள்ளது. ஒன்று சென்னையில் தஹில் ரமாணி இரண்டு வீடுகள் வாங்கியதாகவும் அந்த வீடுகள் வாங்கியபோது நடந்த பணப்பரிமாற்றத்தில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது
 
இன்னொரு குற்றச்சாட்டாக சில கடத்தல் தடுப்பு பிரிவுகளை கலைத்ததாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தஹில் ரமாணி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்
 
அதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக தஹில் ரமாணி மீதான புகாரை சிபிஐ விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் இன்று சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து தஹில் ரமாணி வழக்கை விசாரிக்க முடிவு செய்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்