உமா மகேஸ்வரி கொலையில் முக்கிய நபர்களுக்கு சம்மன் – சிபிசிஐடி முதல் நடவடிக்கை !

புதன், 31 ஜூலை 2019 (14:21 IST)
உமா மகேஸ்வரி கொலை வழக்கு தொடர்பான விசாரணைக்காக சிலருக்கு சிபிசிஐடி போலிஸார் சம்மன் அனுப்பியுள்ளார்.

முன்பகைக் காரணமக நெல்லையில் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் மற்றும் பணிப்பெண் ஆகிய மூவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக விசாரணை செய்ததில் திமுக பிரமுகர் சீனியம்மாளின் மகன் கார்த்திகேயன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கார்த்திகேயனிடம் நடத்தப்பட்ட விசாரணையின் பலனாக இந்த வழக்கில் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி மற்றும் உமா மகேஸ்வரி வீட்டில் திருடு போயிருந்த நகைகள் ஆகியவவை பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இந்த வழக்கின் முக்கியத்துவம் காரணமாக வழக்கு சிபிசிஐடி போலிஸ் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

சிபிசிஐடி போலிஸார் நேற்று கொலை நடந்த வீட்டை மேற்பார்வையிட்டனர். அதையடுத்து இந்தகொலையில் சம்மந்தப்பட்ட சீனியம்மாள், அவரது கணவர் சன்னியாசி ஆகியோருக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். அதுபோல கொலை செய்யப்பட்ட உமா மகேஸ்வரின் மகளுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்