வேங்கை வயல் விவகாரம்: மேலும் ஒரு மாதம் அவகாசம் கேட்ட சிபிசிஐடி..!

Webdunia
வெள்ளி, 27 அக்டோபர் 2023 (19:16 IST)
வேங்கை வயல் வழக்கை சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில் வேங்கை வயல் விசாரணையை முடிக்க கூடுதலாக ஒரு மாத காலம் அவகாசம் கேட்டு புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் சிபிசிஐடி அதிகாரிகளுக்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கியுள்ளது.  கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வேங்கை வயல் பகுதியில் குடிநீர் தொட்டியில் மனித மலம் கலந்த விவகாரம் தமிழகத்தை பெரும் பரபரப்பை ஏற்படுத்த நிலையில் இந்த விவகாரம் குறித்து தற்போது சிபிசிஐடி போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர்

விசாரணை விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருப்பதாக தமிழக அரசு வட்டாரங்கள் கூறினாலும் இந்த விசாரணை மிகவும் மந்தமாக நடைபெற்று வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.  

இந்த நிலையில் சிபிசிஐடி போலீஸ் சார் இந்த விசாரணையை முடிக்க மேலும் ஒரு மாதம் ஆனாலும் அவகாசம் கேட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்