விசிக தலைவர் திருமாவளவன் மீதான வழக்கு ரத்து: சென்னை ஐகோர்ட் உத்தரவு

Webdunia
செவ்வாய், 28 ஜூன் 2022 (12:57 IST)
விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உள்பட ஒருசில அரசியல் தலைவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
கடந்த 2019ஆம் ஆண்டு மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக சென்னையில் போராட்டம் நடத்தியதாக சிபிஎம் மாநில செயலாளர் கோபாலகிருஷ்ணன், சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது
 
இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து பாலகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெற்றது 
 
இந்த விசாரணையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்திய மூவரின் மீதான வழக்கு ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்